Home இந்தியா ‘வாய்மையே வெல்லும்’: இது மோடியின் திவிட்டர் கருத்து

‘வாய்மையே வெல்லும்’: இது மோடியின் திவிட்டர் கருத்து

580
0
SHARE
Ad

modi721

புது டில்லி, டிசம்பர் 27- குஜராத் கலவர வழக்கில் தன்னை குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து திவிட்டரில் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் காங்கிரஸ் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாப்ரி மற்றும் 68 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

#TamilSchoolmychoice

முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில் தான் இந்தப் படுகொலை நடந்தது என ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனைத் தொடந்து உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ முன்னாள் இயக்குனர், ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. ஆனால் அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவோ, குல்பர்க் படுகொலையில் மோடிக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 59 பேருக்கும் தொடர்பில்லை என தெரிவித்தது.

இதனால் வழக்கிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டார். ஆனால் இதை ஜாகியா ஏற்றுக் கொள்ளவில்லை, விசாரணை முறையாக நடக்கவில்லை என்று கூறி மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

அதன்படி இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மோடிக்கு எதிரான ஜாகியா ஜாப்ரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு மோடியின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியது என்பதால், இந்தியா முழுவதும் இந்த தீர்ப்பு மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், தீர்ப்பு வெளியானவுடன் குஜராத் முதல்வர் மோடி தனது திவிட்டர் பக்கத்தில் ‘வாய்மையே வெல்லும். உண்மை மட்டுமே வெற்றி பெறும்’ என்று கருத்தைப் பதிவு செய்துள்ளார்.