Home அரசியல் “தேசிய முன்னணி வெற்றியடைய உதவுவதால் நிதி வழங்கப்படுகிறது” – பெர்காசா கூறுகிறது

“தேசிய முன்னணி வெற்றியடைய உதவுவதால் நிதி வழங்கப்படுகிறது” – பெர்காசா கூறுகிறது

850
0
SHARE
Ad

ibrahim-aliகோலாலம்பூர், டிச 27 –  அடுத்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றியடைவதற்கு பெர்காசா உதவி செய்யும் என்ற நோக்கில் அரசாங்கம் நிதியை வழங்குகிறது என்று சிலாங்கூர் பெர்காசா தலைவர் அபு பக்கர் யாஹ்யா தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டரசு நில ஆணையத்தின் (Felda) தலைவர் முகமட் இஷா சமட் இந்த நிதி விவகாரம் குறித்து பொதுமக்களுக்கு அறிவித்ததையும் அபு பக்கர் சாடியுள்ளதாக சினார் ஹரியான் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“கட்சியின் மூத்த உறுப்பினரான அவர் இவ்வாறு அறிக்கை விடுத்திருக்கக் கூடாது. காரணம் அது அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. அவருக்குத் தெரிந்திருந்தால் கூட பொதுவில் வெளியிட்டிருக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“வரும் 14 வது பொதுத்தேர்தலில், தேசிய முன்னணியை வெற்றியடையச் செய்யும் நோக்கி தான் பெர்காசா நிதியைப் பெறுகிறது. காரணம் மலாய் உரிமைக்காக போராடும் ஒரு அமைப்பாகும், தனிப்பட்ட விஷயங்களுக்கான அமைப்பு அல்ல” என்று அபு பக்கர் கூறினார்.

தேசிய முன்னணிக்கு ஆதரவாக மலாய் மக்களை ஒன்று திரட்டுவதால் தான் பெர்காசா இயக்கத்திற்கு அரசாங்க முகவர்கள் நிதி வழங்குவதாக அவ்வியக்கத்தின் பொதுச்செயலாளர் சையத் ஹஸ்ஸான் சையத் கடந்த வாரம் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை இயக்கத்தின் ஆண்டுக்கூட்டத்தில் பேசிய பெர்காசா இயக்கத் தலைவர் இப்ராகிம் அலி (படம்), மலாய்காரர்களின் பிரச்சனைகளை தீர்க்காமல், அரசாங்கம் பலவீனமாகவும், பல் இல்லாமலும் தொடர்ந்து இருக்குமானால் அம்னோவிற்குப் பதிலாக பெர்காசா உருமாறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.