Home நாடு காவல்துறை வேலை பாதுகாப்பு தருவது மட்டுமே – பிஎஸ்எம் அருட்செல்வன்

காவல்துறை வேலை பாதுகாப்பு தருவது மட்டுமே – பிஎஸ்எம் அருட்செல்வன்

550
0
SHARE
Ad

S. Arutchelvan2கோலாலம்பூர், டிச 30 –  காவல்துறையின் வேலை என்பது பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே, மாறாக விலையேற்றத்திற்கு எதிராக மக்கள் போராடலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது அல்ல என்று பிஎஸ்எம் (Parti Sosialis Malaysia) கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.அருட்செல்வன் இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்கட்டணம், நெடுஞ்சாலை டோல் என பல்வேறு விலையேற்றங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை. ஆனால் காவல்துறையின் அறிக்கை மக்களின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக உள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விலையேற்றத்தை மையமாக வைத்து அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் நாளை டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணிக்கு, எந்த ஒரு கருணையோ அல்லது சமரசமோ காட்ட மாட்டோம் என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice