Home இந்தியா எஸ்.வி. சேகருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்!

எஸ்.வி. சேகருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்!

619
0
SHARE
Ad

22-sv-sekar5-600சென்னை, டிசம்பர் 30- தனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக நடிகரும், பாஜகாவில் சமீபத்தில் இணைந்தவருமான எஸ்.வி.சேகர் புகார் கூறியுள்ளார். ராமாயண இதிகாச நாயகனும் கடவுளாக வணங்கப்படுபவருமான ராமரை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக இயக்குநரும் , நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் மீது நடிகர் எஸ்.வி.சேகர் முதல்வருக்கு புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு நேற்று முந்தினம் காலை முதல் அவரது புகாரைக் கண்டித்தும், அசிங்கமாகப் பேசியும் கொலை மிரட்டலையும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் விடுப்பதாகச் சேகர் தரப்பு கூறியுள்ளது.

மேலும் இது தொடர்பாகத் தனது கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்குத் தெரிவித்திருப்பதாகவும், காவல்துறைக்கு புகார் அனுப்பியிருப்பதாகவும் சேகர் கூறியுள்ளார்.