Home இந்தியா மன்மோகன் பதவி விலகுவாரா? பிரதமர் வேட்பாளர் யார்? – டில்லியில் பரபரப்பு

மன்மோகன் பதவி விலகுவாரா? பிரதமர் வேட்பாளர் யார்? – டில்லியில் பரபரப்பு

593
0
SHARE
Ad

MANMOHANபுதுடில்லி, டிச 31 – நடந்து முடிந்த 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாக வந்ததையடுத்து, வரும் லோக்சபா (நாடாளுமன்ற) தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மாற்றப்படலாம் என்ற கருத்து நிலவுவதால் அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பு நிலவு வருகின்றது.

அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘நான் ராகுல் தலைமையிலான காங்கிரசில் பணியாற்ற தயாராக இருக்கிறேன்’ என்று அறிவித்திருந்தார். எனவே மன்மோகன் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்வார் என்றும் கூறப்படுகின்றது.

இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கட்சித் தலைமை தான் அறிவிக்க வேண்டும் என்று  உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

வரும் ஜனவரி 3 ஆம் தேதி, பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு அதிமுக்கியமானதாகக் கருதப்படுகின்றது.கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் இது போன்று ஓரு முன்னேற்பாடான பத்திரிகையாளர் சந்திப்பை  ஏற்பாடு செய்ததில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் பதவி விலகவுள்ளார் என்ற தகவலை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. பிரதமர் பதவி விலகும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே பிரதமர் பதவி விலகுவார்கள். ஆனால் காங்கிரஸ் தரப்பில் வலுத்து வரும் அழுத்தம் காரணமாக பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் பதவி விலகுவார் என்ற பரபரப்பான தகவல் டில்லியில் தற்போது உலா வருகிறது.