Home வாழ் நலம் கணினியில் இருந்து கண்களைப் பாதுகாக்க வழிமுறைகள்

கணினியில் இருந்து கண்களைப் பாதுகாக்க வழிமுறைகள்

683
0
SHARE
Ad

d67aef9b-c8ae-4a02-8f5a-71419f256731_S_secvpf

கோலாலம்பூர், டிசம்பர் 31- கணினி இன்று நம் வாழ்க்கையில் இணைந்த விஷயமாகி விட்டது. ஆனால் அதிக நேரம் கணினியில் செலவிடுவோர், கண்களில் கவனமாக இருக்க வேண்டும்.

1. உங்கள் கண்களிலிருந்து, கணினியின் திரை ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

2. அறையில் ஒளி அமைப்பு பல நேரம் நம் கண்களுக்குப் பலவகையில் சோதனைகளைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கணினியின் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் திரையின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும்.

3. நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம்.

4. கணினியின் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணிபுரிந்து கொண்டிருந்தால், அதிகபட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்குப் புத்துணர்வைத் தரும்.

5. பொதுவாக ஒரு நிமிடத்திற்கு நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கணினியில் பணியாற்றுகையில், 5 முறைதான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை கண் சிமிட்டவும்.

6. ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

7. கணினியில் பணியாற்றுகையில் கண்களில் சோர்வு ஏற்பட்டால் அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர் அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள்.

8. இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

9. ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடலாம்.