Home வணிகம்/தொழில் நுட்பம் மைடீன் பேரங்காடி நிறுவனம் பங்குச் சந்தையில் இடம் பெறும்!

மைடீன் பேரங்காடி நிறுவனம் பங்குச் சந்தையில் இடம் பெறும்!

568
0
SHARE
Ad

Ameer-Ali-Mydin-300-x-200னவரி 5 – வெளிநாட்டிலிருந்து வந்து மலேசியாவை வணிக ரீதியாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் உலகளாவிய பேரங்காடி நிறுவனங்களுக்கு மத்தியில் சுயமான சிந்தனையோடும், சொந்த உழைப்போடும் மைடீன் என்ற பெயரில் பேரங்காடிகளை நாடு முழுமையிலும் அமைத்து வெற்றி கண்டவர் டத்தோ அமீர் அலி மைடீன்.

#TamilSchoolmychoice

தனது குடும்பப் பெயரின் ஒரு பகுதியையே தான் நடத்தும் பேரங்காடியின் பெயராகக் கொண்டு, இன்று மலேசியாவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக அதனை உருவாக்கி, மிகப் பெரிய வெளிநாட்டு பேரங்காடிகளுக்கு சவால் விடும் வகையில் மைடீன் பேரங்காடிகளை நடத்திக் கொண்டிருக்கின்றார் அமீர் அலி.

தற்போது, 2.6 பில்லியன் ரிங்கிட்டை தனது ஆண்டு விற்பனையாகக் கொண்டுள்ள மைடீன், தங்களின் மொத்த விற்பனை வருமானத்தை உயர்த்த தாங்கள் பாடுபட்டு வருவதாகவும், மைடீன் நிறுவனத்தின் ஆண்டு விற்பனை 4 பில்லியன் முதல் 5 பில்லியன் வரை என்று உயரும்போது தனது நிறுவனம் பங்குச் சந்தையில் இடம் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதன் நிர்வாக இயக்குநர் அமீர் அலி ஸ்டார் ஆங்கில நாளேட்டுக்கு வழங்கிய நேர்முகக் காணலில் கூறியுள்ளார்.

“நீண்ட காலத் திட்டம் என்று பார்க்கும்போது ஒவ்வொரு நிறுவனமும் பங்குச் சந்தையில் இடம் பெற வேண்டியது அவசியம்தான். ஆனால், முதலில் நாங்கள் விற்பனையில் உயர்வு காண விரும்புகின்றோம்” என்றும் அமீர் அலி கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் மேலும் 650 மில்லியன் ரிங்கிட் முதலீட்டில் ஐந்து புதிய பேரங்காடிகளை மைடீன் திறக்கும். தற்போது 200 கிளை அங்காடிகளையும் 14 மொத்த விற்பனை பேரங்காடிகளையும் மைடீன் கொண்டிருக்கின்றது.

சாம்ஸ் டெலி (Sam’s Deli) என்ற பெயரில் தங்களின் சொந்த முத்திரை சின்னத்தைக் கொண்ட சிற்றுண்டி உணவகங்களையும் மைடீன் திறக்கவிருக்கின்றது என்றும் அமீர் அலி கூறினார்.

ஐரோப்பிய வகை சிற்றுண்டி வகைகளையும் பானங்களையும் விற்பனை செய்யும் உயர்தர உணவகத் தொடராக சாம்ஸ் டெலி திகழும். இந்த தொடரின் முதல் உணவகம் சிரம்பானில் திறக்கப்படும்.