Home நாடு ‘ஜாயிஸ்’ செயலுக்கு சிலாங்கூர் அரசாங்கம் தான் பொறுப்பு – சொய் லெக்

‘ஜாயிஸ்’ செயலுக்கு சிலாங்கூர் அரசாங்கம் தான் பொறுப்பு – சொய் லெக்

621
0
SHARE
Ad

soi-lekகோலாலம்பூர், ஜன 7 – சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரம் (ஜாயிஸ்) மூலம் உருவாகியிருக்கும் சர்ச்சையை பக்காத்தான் தான் தீர்க்க வேண்டும் என்று முன்னாள் மசீச கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறியுள்ளார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் ஜாயிஸ் இருந்து, சிலாங்கூர் சுல்தானின் ஆணையின் படி செயல்பட்டு வருவதால், இதை தேசிய விவகாரமாக உருவாக்கக் கூடாது என்றும் சொய் லெக் தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சொய் லெக், “மலேசிய பைபிள் கழக அலுவலகத்தில் (BSM) ஜாயிஸ் சோதனை தொடர்பாக பக்காத்தான் தான் அதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். மாறாக இந்த விவகாரத்தில் காவல்துறையையோ அல்லது பிரதமர் அலுவலகத்தையோ அழுத்தம் கொடுக்கக் கூடாது” என்று குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“ஜாயிஸ் சட்டத்தை மீறியுள்ளதாகத் தெரிந்தால் சிலாங்கூர் அரசாங்கம் தான் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் சொய் லெக் தெரிவித்தார்.

கடந்த வாரம், அல்லாஹ் விவகாரம் தொடர்பில் மலேசிய பைபிள் கழக அலுவலகம் (BSM), இஸ்லாமிய விவகார இலாகாவால் (ஜாயிஸ்) சோதனையிடப்பட்டு மலாய் மொழியில் இருந்த 300 பைபிள் பிரதிகளும், ஐபானில் இருந்த 10 பிரதிகளும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.