Home நாடு பேராக் தடுப்பு முகாமை நிரந்தரமாக மூடுங்கள் – ஜிஎம்ஐ இயக்கம் வலியுறுத்தல்

பேராக் தடுப்பு முகாமை நிரந்தரமாக மூடுங்கள் – ஜிஎம்ஐ இயக்கம் வலியுறுத்தல்

415
0
SHARE
Ad

1-gmiபேராக், ஜன 8 – எதிர்கட்சித் தலைவர்கள் உட்பட பல போராட்டவாதிகளை தடுத்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட பேராக் மாநிலத்தில் உள்ள கமுந்திங் தடுப்பு முகாமை மூடும் படி ஐஎஸ்ஏ (Internal Security Act ) சட்டத்திற்கு எதிரான அமைப்பான ஜிஎம்ஐ (GMI) அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பலர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, அம்முகாமை நிரந்தரமாக மூடும் படி அந்த இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஜிஎஸ்ஏ இயக்கத்தின் தலைவர் சையத் இப்ராகிம் சையட் நோ கூறுகையில், “உருமாற்றம் தேவை என்பதை அரசாங்கம் உணருமானால் முதலில் கொடுமையான ஐஎஸ்ஏ சட்டத்தின் நினைவுச் சின்னமான இந்த தடுப்பு மையத்தை மூட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice