Home கலை உலகம் கட்டுமஸ்தான உடல்வாகுடன் தோன்றவிருக்கும் அரவிந்த்சாமி

கட்டுமஸ்தான உடல்வாகுடன் தோன்றவிருக்கும் அரவிந்த்சாமி

515
0
SHARE
Ad

aravindsamy

சென்னை, ஜன 9- ரோஜா, தளபதி படங்கள் வெளியான சமயத்தில் அழகான கதாநாயகன்களில் ஒருவராக தமிழ் சினிமாவை வலம் வந்தவர் அரவிந்த்சாமி.

ஆனால் திடீரென்று சினிமாவை விட்டு விலகியவர் பல ஆண்டுகளுக்கு பிறகு கடல் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் நுழைந்தார்.

#TamilSchoolmychoice

தற்போது மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்கும் இந்திப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்து  நடிக்கும் தமிழ் படம் ஒன்றிற்காக உடலை மிகவும் கட்டுக்கோப்போடு  வைத்திருக்கிறார். இதற்காக எப்பொழுதும் உடற்பயிற்சிக்கூடத்தில் அதிக உடற்பயிற்சி செய்தும் வருகிறார். இப்போது கிட்டத்தட்ட ஆணழகன் போட்டிக்கு தயாராகிற அளவிற்கு தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு முக்கியமான தமிழ் படத்திற்காக பயிற்சி செய்து வருவதாக கூறினார். மேலும், அந்த படத்தை பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது என்றும்  முறைப்படி சம்பந்தப்பட்டவர்கள் அறிவிப்பார்கள் என்று கூறியுள்ளார்.