Home இந்தியா கர்நாடகப் பிரதேச பாரதீய ஜனதாவில் மீண்டும் எடியூரப்பா!

கர்நாடகப் பிரதேச பாரதீய ஜனதாவில் மீண்டும் எடியூரப்பா!

785
0
SHARE
Ad

Ediyurappa-300-x-200பெங்களூர், ஜனவரி 9 –பாரதீய ஜனதாவில் இருந்து வெளியேறி புதிகட்சியைத் தொடங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா (படம்) தனது கட்சியை கலைத்துவிட்டு இன்று பாரதீய ஜனதாவில் முறைப்படி இணைந்தார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே எடியூரப்பா கட்சி எம்.எல்.ஏக்கள் 4 பேர் பாரதீய ஜனதாவில் சேர்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்து விட்டனர். இன்று எடியூரப்பா மல்லேசுவரத்தில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அங்கு மாநில தலைவர் பிரகலாத்ஜோஷி முன்னிலையில் முறைப்படி பாரதீய ஜனதாவில் இணைந்தார். அவருடன்அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும், நிர்வாகிகளும் இணைந்தனர்.

கர்நாடகத்தின் மக்கள் ஆதரவு கொண்ட தலைவர்களுள் ஒருவரான எடியூரப்பா பாரதீய ஜனதாவில் மீண்டும் இணைந்திருப்பதால் அந்த கட்சி புதிய பலம் பெறும் என்றும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான இடங்களை கர்நாடக மாநிலத்தில் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.