Home One Line P2 கொவிட்19: எடியூரப்பாவுக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

கொவிட்19: எடியூரப்பாவுக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

642
0
SHARE
Ad

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார்.

இதுதொடர்பாக நேற்றிரவு முதல்வர் எடியூரப்பா தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது, தான் நலமுடன் இருப்பதாகவும், எனினும் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

“பரிசோதனையில் கொவிட்19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அண்மையில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்” என்று அவர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் எடியுரப்பா அலுவலகத்தை சேர்ந்த ஊழியர்களுக்கு கொவிட்19 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொவிட்19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து, தற்போது கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.