நியூயார்க், ஜன 10- அமெரிக்காவில் விசா மோசடி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே, டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் தகவல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் விசா மோசடி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள இந்திய துணை தூதரான தேவயானி கோப்ரகடே, தம் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை -ஆதாரமற்றவை என்று தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் தமக்கு உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். இவருக்கு நாடு திரும்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தேவயானி கோப்ரகடே, இன்றோ அல்லது நாளையோ நாடு திருப்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.