Home இந்தியா அமெரிக்காவில் எனது மகள்கள் என்ன செய்கிறார்களோ? தேவயானியின் வேதனை

அமெரிக்காவில் எனது மகள்கள் என்ன செய்கிறார்களோ? தேவயானியின் வேதனை

667
0
SHARE
Ad

Devyani-Khobragade

புது டெல்லி, ஜன 13 – விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவயானி கோப்ரகடே திரும்ப இந்தியா அனுப்பப்பட்டார். இந்நிலையில் புது டெல்லியில் ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர், ‘அமெரிக்காவில் எனது மகள்கள் துணையில்லாம் என்ன செய்கிறார்களோ?’ என்று வேதனை தெரிவித்துள்ளார்.

தனது கணவர் அமெரிக்காவிலேயே பணிபுரிய வேண்டும், மகள்களும் அங்கேயே தங்கி படிக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்து விட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவுக்கு நான் செல்லவே முடியாது என்ற நிலையில் எங்கள் குடும்பம் ஒன்று சேரும் வாய்ப்பே கிடையாதா? என்பதை நினைத்துப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது என்றார்.

#TamilSchoolmychoice

4 மற்றும் 7 வயது மகள்கள் இருவரும் தன்னைவிட்டு பிரிந்து இருந்ததே கிடையாது. தான் திரும்பவும் அமெரிக்காவுக்கு செல்ல முடியாது என்பதை புரிந்துக் கொள்ள முடியாத வயதில் இருக்கும் மகள்களை நினைத்து பார்க்கையில் மிகவும் கவலையாகயுள்ளது . இந்தியாவுக்கு வந்த பிறகு அவர்களுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசினேன். ‘அம்மா, நீங்கள் எப்போது வீட்டுக்கு வருவீர்கள்?’ என்று எனது இளைய மகள் கேட்டாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் கண்ணீருடன் வாயடைத்து நின்றுவிட்டேன், உதவிக்கு கூட யாருமின்றி என் மகள்களை கணவரிடம் ஒப்படைத்து விட்டு வந்துள்ளேன்.

குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்ற அவர் என்ன சிரமப்படுகிறாரோ? என்னை பார்க்க முடியாமல் எனது மகள்கள் எப்படி தவித்துக் கொண்டிருக்கிறார்களோ, இந்நேரம் என்ன செய்கிறார்களோ என்பதை நினக்கும்போது என்னால் துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார்.