Home இந்தியா காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் ஜனவரி 17ல் அறிவிப்பு?

காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் ஜனவரி 17ல் அறிவிப்பு?

669
0
SHARE
Ad

rahul_gandhiபுதுடில்லி, ஜன 15 – வரும் ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி (படம்)அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சி வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, கட்சி தலைமை தம்மிடம் எந்த பொறுப்பை அளித்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக ராகுல் காந்தி பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

” 2014 ஆம் ஆண்டு லோக்சபா நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, நல்ல தலைமையுடன் சிறப்பான ஆட்சியை  அமைக்கும். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டின் ஒற்றுமையை காக்க முடியும். எந்த ஒரு தனிநபரையும் (மோடி) நம்பி நாடு செல்ல முடியாது” என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் தனது சகோதரி பிரியங்கா முக்கிய பங்கு வகிப்பார் எனவும், அமிதி மற்றும் ராபெர்லி தொகுதிகளில் மட்டும் அவர் பிரச்சாரம் மேற்கொள்வார் எனவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் பிரியங்கா போட்டியிடவுள்ளதாகக் கூறப்படும் ஆரூடங்களை ராகுல் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

“பிரியங்கா எனது சகோதரி, தோழி, காங்கிரஸ் தொண்டர்களில் ஒருவர். அவர் தேர்தலில் எனக்கு உதவியாக இருப்பார்” என்று ராகுல் கூறியுள்ளார்.