Home இந்தியா ‘கனிமொழியை பார்த்து பொறாமைப்படுகிறேன்’ – கருணாநிதி

‘கனிமொழியை பார்த்து பொறாமைப்படுகிறேன்’ – கருணாநிதி

635
0
SHARE
Ad

M_Id_237672_Kanimozhiசென்னை, ஜன 16 – தென் சென்னை மாவட்ட, தி.மு.க., கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நேற்று முன்தினமும், நேற்றும், இன்றும், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

முதல் நாள் நடந்த துவக்க விழாவில், கனிமொழி பேசியதாவது, “எந்த ஒரு நாட்டில், சரித்திரத்தை மனிதன் மறந்து விடுகிறானோ, அவன், வாழ்க்கையை மறந்து விடுகிறான். தமிழர்கள் ஒன்று திரண்டு, வீழ்ந்த சமுதாயத்தை மீட்டெடுக்க பாடுபட வேண்டும்.எந்த மதம், ஜாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும், தமிழர்கள் என்றால், கொண்டாட வேண்டிய முக்கிய விழா, பொங்கல் திருநாள். இங்கு நடத்தப்படுகிற, கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், சாதாரண மனிதனின் வாழ்க்கையை, தூக்கி நிறுத்துவதற்காக நடத்தப்படுபவை. பாரம்பரிய மற்றும் மண் சார்ந்த கலை நிகழ்ச்சிகளை கொண்டாடவில்லை என்றால், நம் சரித்திரத்தை இழந்தவர்களாக ஆகி விடுவோம்” இவ்வாறு கனிமொழி பேசினார்.

நிகழ்ச்சியில், தி.மு.க., தலைவர், கருணாநிதி பேசியதாவது, “தற்போது, ஆட்சி மாறினால், கலாச்சாரமும், பண்பாடும் மாறவேண்டிய நிலையே உள்ளது. போற்றி, பாராட்டப்பட்ட கலைகள் எல்லாம், குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.’தை பிறந்தால், வழி பிறக்கும்’ என்று சொல்ல தெரியும். ஆனால், தமிழ் புத்தாண்டு என்றால், எப்போது என்று தெரியாத நிலையில், தமிழன் இருந்தான். தை முதல் நாள் தான், தமிழ் புத்தாண்டு என்பதை, திராவிட இயக்கமே ஞாபகப்படுத்தியது.நானே அதிசயிக்கத்தக்க வகையில், ஏன், பொறமைப்படும் அளவிற்கு, கவிதை, கலைத் துறையில், கனிமொழி, சிறந்து விளங்குகிறார்” இவ்வாறு கருணாநிதி பேசினார்.