Home இந்தியா கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜயகாந்த் மலேசியா வந்துள்ளாரா?

கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜயகாந்த் மலேசியா வந்துள்ளாரா?

544
0
SHARE
Ad

ஜனவரி 19 – இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழ்நாட்டையே vijayakanth (2)உலுக்கி வரும் அரசியல் கேள்வி தேமுதிக தலைவர் விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைத்து கலக்கப் போகின்றார் என்பதுதான்!

பலவிதமான ஆரூடங்களைத் தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகள் வெளியிட்டு வரும் வேளையில், கூட்டணி பற்றி விவாதிக்கவும், கலந்தாலோசிக்கவும் விஜயகாந்த் மலேசியா வந்துள்ளதாக தமிழகப் பத்திரிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

கூட்டணி பற்றிய குழப்பத்தில் இருக்கும் விஜயகாந்த் தற்போது மலேசியா வந்துள்ளாராம். மதுரையில் வசிக்கும், மலேசியாவை சேர்ந்த அவருடைய முஸ்லிம் நண்பர்ஒருவரும் விஜயகாந்துடன் வந்திருக்கிறாராம்.

இங்கு, மலேசியாவில் தங்கியிருந்து, தனது தமிழக நண்பர்களை வரவழைத்துப் பேச இருப்பதாகவும், கூட்டணி தொடர்பான பல்வேறு சாத்தியக் கூறுகளை ஆராயப் போவதாகவும் தமிழகப் பத்திரிக்கைகள் ஆரூடங்கள் வெளியிட்டுள்ளன.

சென்னை திரும்பியதும், கூட்டணி பற்றி விஜயகாந்த் இறுதி முடிவு எடுத்து அதனை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகின்றது.

பிப்ரவரி முதல் வாரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னை வந்து மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கின்றார். இதே கூட்டத்தில் பாஜகவில் இணையவுள்ள மதிமுக கட்சியின் தலைவர் வைகோவும் கலந்து கொள்ளவிருக்கின்றார். மற்ற பாஜக சார்பு தமிழக கட்சிகளும் அதன் தலைவர்களும் இந்த மாபெரும் சரித்திரபூர்வ பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

மலேசியாவிலிருந்து திரும்பியதும், விஜயகாந்த் பாஜகவில் சேர முடிவெடுத்தால், அவரும் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றும் அதன்வழி பாஜகவுடனான தனது கூட்டணியை உறுதிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.