Home நாடு காலிட்- அஸ்மின் மோதல் முற்றுகின்றது! – அன்வாருக்குத் தலையிடி!

காலிட்- அஸ்மின் மோதல் முற்றுகின்றது! – அன்வாருக்குத் தலையிடி!

920
0
SHARE
Ad

Khalid-&-Azmin-Ali 300 x 200ஜனவரி 19 – சிலாங்கூர் மந்திரிபெசார் டான்ஸ்ரீ காலிட், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி இருவருக்கும் இடையிலான மோதல் முற்றி வருவதோடு, இந்த அதிகாரப் போராட்டம் பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநிலத்தின் முதன்மை அரசு நிறுவனமான பிகேஎன்எஸ் நிறுவனத்தில் இயக்குநர் வாரியக்குழுவில் பணியாற்றி வந்த அஸ்மின் அலி அண்மையில் யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்குப் பின்னணியிலிருந்து செயல்பட்டவர் டான்ஸ்ரீ காலிட் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. காரணம், மந்திரிபெசார் என்ற முறையில் அவர்தான் பிகேஎன்எஸ் நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்.

அஸ்மின் அலியின் நீக்கத்தைத் தொடர்ந்து அவரை மீண்டும் பிகேஎன்எஸ் வாரியத்தில் நியமிக்க வேண்டும் என அன்வார் கட்டளையிட்டுள்ளார்.

இதற்கிடையில், பிகேஆர் கட்சியின் அரசியல் குழு கூடி, மந்திரிபெசார் டான்ஸ்ரீ காலிட் மந்திரிபெசார் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என முடிவெடுத்தது. பிகேஆர் கட்சியின் அரசியல் குழுவில் இருப்பவர்களில் 90 சதவீதத்தினர் அஸ்மின் அலியின் ஆதரவாளர்கள் என்றும் கூறப்படுகின்றது.

ஆனால், அஸ்மின் அலி ஆதரவாளர்களின் இந்த முயற்சியை அன்வார் இப்ராகிம் தடுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பிகேஆர் கட்சியின் எல்லா அரசியல் நிலைகளிலும் காலிட்-அஸ்மின் இருவருக்கும் இடையிலான மோதல்களின் பிரதிபலிப்புகள் வெளிப்படத் தொடங்கி விட்டன.

பிகேஆர் கட்சியின் தலைவர்கள் பலரும், தொகுதி நிலைகளிலும், தங்களின் நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் இந்த மோதல்கள் விசுவரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டன.