Home கலை உலகம் இயக்குநர் கவுதம் மேனன் மீது போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்தனர்!

இயக்குநர் கவுதம் மேனன் மீது போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்தனர்!

486
0
SHARE
Ad

Gautham-Menon-300-x-200ஜனவரி 19 – தமிழ்ப்பட உலகின் பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன். மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் நாளடைவில் வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற பல படங்களை இயக்கி புகழின் உச்சிக்குச் சென்றதோடு, தமிழ்ப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகவும் உயர்ந்தார்.

#TamilSchoolmychoice

ஆனால், அண்மையில் அவர் இயக்கி வெளிவந்த நீதானே என் பொன்வசந்தம் வசூலில் வெற்றி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து அடுத்து அவர் ஆரம்பிக்கவிருந்த படத்திலிருந்து நடிகர் சூர்யாவும் விலகிக் கொண்டார்.

இந்நிலையில்,சென்னைஉயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், கவுதம்மேனன் மீது மோசடி வழக்குப் பதிவுசெய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணைதாண்டிவருவாயா என்ற படத்தை இயக்கிய கவுதம் மேனன் மீது, அந்தபடத்தின் தயாரிப்பாளர் ஜெயராமன், சென்னை காவல் துறை ஆணைய அலுவலகத்தில்புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார்.

அந்தபுகார் மனுவில், விண்ணைத்தாண்டிவருவாயா படத்தை இந்தியில் மொழிமாற்றம் (டப்பிங்) செய்துவெளியிட, தனக்கு ரூ.99 லட்சம் உரிமப் பணம் (ராயல்டி) கேட்டதாகவும், அதை தராமல், படத்தின் இயக்குநர் கவுதம்மேனன் ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது மோசடி வழக்குப்பதிவுசெய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுஇருந்தார்.

ஆனால் இந்த புகாரின் மீது கவுதம் மேனன் மீது வழக்குப் பதிவுசெய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கவுதம் வாசுதேவ் மேனன்உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக்கோரிஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்தபுகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவுபோலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்தியகுற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்றுகவுதம்மேனன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.