Home தொழில் நுட்பம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சேவை

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சேவை

522
0
SHARE
Ad

iphone-5s-reut_505_112813062738

கோலாலம்பூர், ஜன 20 – கடந்த வருடம் ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் 5C மற்றும் ஐபோன் 5S ஆகியவற்றின் திரைகளை பிரத்தியேக தொகைக்கு விரைவில் அதன் ஸ்டோரிலேயே மாற்றிக்கொள்வது தொடர்பில் கடந்த நவம்பவர் மாதம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் உடைந்த திரைகளை ஜனவரி 20ம் திகதி (இன்று) தொடக்கம் ஆப்பிள் ஸ்டோர்களில் மாற்றிக்கொள்ள முடியும் என மற்றுமொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

எனினும் இச்சேவை கனடா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் கிடைக்கப்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திரைமாற்றத்தினை உத்தரவாதத்துடன் ரிங்கிட் மலேசியா 494 வெள்ளிக்கும் உத்தரவாதம் இன்றி ரிங்கிட் மலேசியா 262 வெள்ளிக்கும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.