Home கலை உலகம் நடிகை வனிதா மூன்றாவதாக நடன ஆசிரியர் ராபர்ட்டை மணக்கிறார்

நடிகை வனிதா மூன்றாவதாக நடன ஆசிரியர் ராபர்ட்டை மணக்கிறார்

919
0
SHARE
Ad

vanitha

சென்னை, ஜன 21- ‘மாணிக்கம்’ என்ற படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தவர் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் ஆவர். இவர் நடன ஆசிரியரான ராபர்ட்டை 3-வது திருமணம் செய்து கொள்கிறார்.

இவர் முதலில் நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் மூலம் வனிதாவுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறான். இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டனர்.

#TamilSchoolmychoice

அதன்பிறகு வனிதா, தொழில் அதிபரான ஆனந்தராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் வனிதாவுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கடந்த வருடம் 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இந்த நிலையில் வனிதாவுக்கும் தற்போது நடன ஆசிரியரான ராபர்ட்டுக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. ராபர்ட்டை வனிதா 3-வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.