Home வாழ் நலம் தொப்பை குறைய எளிய பயிற்சி

தொப்பை குறைய எளிய பயிற்சி

812
0
SHARE
Ad

exercise

கோலாலம்பூர், ஜன 21- அமர்ந்த நிலையில் வேலை செய்பவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது தொப்பையும், முதுகு வலியும். இந்த பிரச்சனை தீர அவர்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்றில்லை. வீட்டில் இருந்தபடியே இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் விரைவில் கிடைப்பதை காணலாம்.

பயிற்சி செய்யும் முறை

#TamilSchoolmychoice

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்து கொள்ளவும். கால்களை 45 பாகை (டிகிரி) வரை மேல் நோக்கி தூக்கவும்(படத்தில் உள்ளபடி). கால் முட்டிகளை மடக்கக்கூடாது. பின்னர் மெதுவாக கைகளையும் தலைக்கு மேல் தூக்க வேண்டும். தலை படத்தில் உள்ளபடி தூக்கிய நிலையில் இருக்க வேண்டும்.

இந்த நிலையில் இருக்கும் போது வயிற்றின் மேல் பகுதியில் அதிர்வுகள் ஏற்படுவதை காணலாம். இவ்வாறு அதிர்வுகள் ஏற்பட்டால் தான் நீங்கள் சரியான முறையில் பயிற்சி செய்வதாக அர்த்தம். இந்த நிலையில் 15 விநாடிகள் வரை இருக்கவும்.

பின்னர் 5 விநாடிகள் ஓய்வு எடுத்த பின்னர் மறுபடியும் இந்த பயிற்சியை 5 முறை செய்யவும். ஆரம்பத்தில் 5 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.

பயிற்சியின்போது கால் முட்டி மடங்காம நேராக தூக்க வேண்டும்.  கையை கீழ் இருக்கும் படத்தின் படி தூக்கலாம் கையை மேல தூக்கும் போது தலை தூக்கியிருக்க வேண்டும். கை கால் தூக்கப்பட்ட நிலையில் 30 வினாடி இருங்கள். 10, 15, …., 60 வினாடி என்று நேரத்தை அதிகரிக்க முயற்சி பண்ணுங்க. தொடர்ந்து இப்பயிற்சியை செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.