Home தொழில் நுட்பம் ஒரு ‘ட்விட்டர்’ அனுப்பினால் 21 அமெரிக்க வெள்ளி பெறலாம் – இங்கல்ல இந்தோனிசியாவில்!

ஒரு ‘ட்விட்டர்’ அனுப்பினால் 21 அமெரிக்க வெள்ளி பெறலாம் – இங்கல்ல இந்தோனிசியாவில்!

539
0
SHARE
Ad

twitter-300-x-200ஜனவரி 22 – உலகில் ட்விட்டர் எனப்படும் குறுந்தகவல் ஊடகத்தின் தலையாய மையமாக தற்போது திகழ்வது இந்தோனிசியாவாகும். இந்த நாட்டில் உங்களுக்கென ட்விட்டர் பக்கம் இருந்தால், அதற்கு 2,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருந்தால், விளம்பரம் மூலம் ஒரு ட்விட்டருக்கு 21 அமெரிக்க வெள்ளி வரை தருவதற்கு விளம்பர நிறுவனங்கள் முன்வருகின்றன.

#TamilSchoolmychoice

காரணம், இந்தோனிசியாவின் தலைநகரான ஜாகர்த்தாவில் மக்கள் அதிகமாக பயணிக்கும் நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அவதியுறும் அவர்கள் தங்களின் செல்பேசிகளின் மீதுதான் தங்களின் கண்களைப் பதித்திருக்கிறார்களாம்.

இதன் காரணமாக, இந்தோனிசியர்களில் 19 சதவீத மக்கள் ட்விட்டர் பக்கம் வைத்திருக்கின்றனர். இது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில் ட்விட்டர் பக்கம் வைத்திருப்போரின் சதவீதத்தை விட அதிகமானதாகும்.

உலகில் அதிகமான ட்விட்டர் பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள நாடு சவுதி அரேபியா ஆகும். இரண்டாவது நிலையில் இந்தோனிசியா இருக்கின்றது. இதற்குக் காரணம், இந்தோனிசியாவில் மலிவான விலையில் நிறைய வகை திறன்பேசிகள் பரவலாகக் கிடைக்கின்றன.

இந்தோனிசியாவில் ட்விட்டரில் பிரபலமானவர்கள் தாங்கள் அனுப்பும் ட்விட்டர் தகவலோடு விளம்பரத்தை இணைப்பதற்கு ஒரு தொகையைப் பெறுகின்றார்கள்.

உதாரணமாக, இந்தோனிசியாவில் புகழ் பெற்ற எர்னெஸ்ட் பிரகாசா என்ற நகைச்சுவை நடிகர் தனது ட்விட்டர் வழி நிறுவனங்கள் விளம்பரம் செய்வதற்கு ஏழு மில்லியன் இந்தோனிசியா ரூப்பியா (670 அமெரிக்க வெள்ளி) வரை தொகையாகப் பெறுவதாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.