Home உலகம் சிரியாவின் போர்க்குற்றம் அம்பலமாகின்றது!

சிரியாவின் போர்க்குற்றம் அம்பலமாகின்றது!

409
0
SHARE
Ad

syria torture

வாஷிங்டன், ஜன 22- சிரியா அரசின் கொடூரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய போர் இன்றளவும் வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி இருப்பதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

syria_torture_picture_004

#TamilSchoolmychoice

குறிப்பாக ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உறங்கி கொண்டிருக்கும் போதே பலியாயினர்.

இதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் போர் தொடுக்க தயாராக இருந்தன. இதற்கிடையே இரசாயன ஆயுதங்களை அழிக்க சிரியா சம்மதம் தெரிவித்ததால், மாபெரும் போர் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே அவ்வப்போது விமானத் தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இணையத்தில் வெளியான புகைப்படங்கள் அரசின் கொடூரத்தை உலகிற்கு எடுத்துக் காட்டுவதாக உள்ளன.

அதில் கழுத்தை நெறித்து மிகவும் கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில் சடலங்கள், வெட்டுக்கள், சிராய்ப்புகள், கண்கள் இல்லா சடலங்கள் என மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் உள்ளன.

அரசுக்கு எதிரான போர்க்குற்ற வழக்குகளில் இந்த புகைப்படங்கள் தகுந்த ஆதாரமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.