Home நாடு விவாகரத்து வதந்தி – நூருல் இஸா மறுப்பு!

விவாகரத்து வதந்தி – நூருல் இஸா மறுப்பு!

521
0
SHARE
Ad

nurul-izzah-anwar-300x199கோலாலம்பூர், ஜன 23 – பிகேஆர் உதவித்தலைவர் நூருல் இஸா அன்வார் தனது கணவர் ராஜா அகமட் ஷாரிர் இஸ்கண்டார் ராஜா சலிமை விவாகரத்து செய்யப்போவதாக ஸ்டார் இணையத்தளம் இன்று வெளியிட்டுள்ள செய்தியை அவர் மறுத்துள்ளார்.

இது குறித்து நூருல் இஸாவின் டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் அவரது ஆதரவாளர் ஒருவர் கேட்ட போது, “இல்லை” என்று ஒரே வார்த்தையில் பதில் அனுப்பியுள்ளார்.

இன்று ஸ்டார் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில், ஷ்யாயிரா நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி நூருல் இஸா மனு கொடுத்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் நூருல் இஸா மற்றும் அவரது கணவர் ராஜா அகமட் ஆகிய இருவரும் விவாகரத்திற்கு சம்மதித்துள்ளதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியதாகவும் ஸ்டார் இணையத்தளம் குறிப்பிட்டு இருந்தது.

எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மகளும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான  நூருல் இஸாவிற்கும், ராஜா அகமட்டிற்கும் கடந்த 2003 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.