Home உலகம் 2.5 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதியில் இருந்து வெளியேற்றம்

2.5 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதியில் இருந்து வெளியேற்றம்

642
0
SHARE
Ad

foreign workers

ரியாத், ஜன 23- சவுதியில் விசா முடிந்த பிறகும் பலர் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். சவுதி அரேபியாவில் இருந்து கடந்த 3 மாதத்தில் மட்டும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

போலி கடவு சீட்டில் வந்து தங்குபவர்கள் , போலி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டு சவுதிக்கு வருபவர்கள், வேறு வழியின்றி கட்டுமான நிறுவனங்களின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர் என பலவிதமான வகையில் சவுதியில் குடியேறியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்களால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது என்ற புகாரும் எழுந்தது.

#TamilSchoolmychoice

இதையடுத்து வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சவுதியில் தொடர்ந்து தங்க ஆவணங்களை சரி செய்து கொள்ள வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதன் படி கடந்த 3 மாதத்தில் மட்டும் 2.5 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களை வெளியேற்றி இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

வெளியாக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் ஏமன் வழியாக சவுதிக்குள் ஊடுருவியர்கள் என்று தெரிய வந்ததால் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.சவுதியில் 90 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், எகிப்து, ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.