Home கலை உலகம் பிரம்மாண்டமான தயாரிப்பில் பிரஷாந்தின் புதிய படம் ‘சாஹசம்’!

பிரம்மாண்டமான தயாரிப்பில் பிரஷாந்தின் புதிய படம் ‘சாஹசம்’!

553
0
SHARE
Ad

prashanth-new-look03ஜனவரி 24 – நடிப்பு, நடனம், உடற்பயிற்சி, சண்டைப்பயிற்சி என சிறுவயது முதல் சினிமாவிற்காகவே தன்னை அற்பணித்தவர் நடிகர் பிரஷாந்த்.

கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு உடலை கூட்டுவது, குறைப்பது, தலைமுடியை மாற்றியமைப்பது என இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் செய்யும் பல வித்தியாசங்களை பல வருடங்களுக்கு முன்பே செய்து காட்டியவர்.

கடந்த இரண்டு வருடங்களாக சில தனிப்பட்ட காரணங்களுக்காக சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்து வந்த பிரஷாந்த், தற்போது ‘சாஹசம்’ என்ற புதிய படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் களமிறங்கவுள்ளார். இதற்காக தனது உடற்கட்டை மேலும் மெருகூட்டிவருகின்றார்.

#TamilSchoolmychoice

புதிய இளம் இயக்குநர் ஒருவர் படத்தை இயக்க, முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர்.

மிகப் பெரிய பட்ஜட்டில், பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்படவுள்ள இப்படத்தின் பாடல் காட்சிகள் ஆஸ்திரேலியா, இஸ்தான்பூல், குவைத், துபாய், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் படமாக்கப்படவுள்ளன.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி பிரஷாந்தின் பிறந்தநாளுக்கு இப்படம் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

– பீனிக்ஸ்தாசன்