Home இந்தியா “என் நிலைப்பாடு குறித்து 30 ஆம் தேதி அறிவிப்பேன்” – அழகிரி

“என் நிலைப்பாடு குறித்து 30 ஆம் தேதி அறிவிப்பேன்” – அழகிரி

799
0
SHARE
Ad

Alagiri-295x200_alமதுரை, ஜன 25 – கட்சியை விட்டு நீக்கிய பின்பு தான் எனக்கு புது தெம்பு வந்துள்ளது. என்னுடைய தொண்டர்கள் இன்னும் பலத்துடன் இருக்கின்றார்கள் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட  காரணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நீக்கப்பட்ட காரணம் குறித்து தனக்கு தெரியவில்லை என்றும், தான் ஹாங்காங் சென்ற தகவலை கட்சிக்கு தெரியப்படுத்தாதது கூட காரணமாக இருக்கலாம். இக்கட்சி ‘ஜனநாயக கட்சி’யல்லவா? என்றும் அழகிரி சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.

மேலும், கட்சியை விட்டு தன்னை நீக்கிய பின், தொண்டர்கள் இன்னும் பலத்துடன் இருக்கின்றார்கள். அவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், என்னுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வரும் ஜனவரி 30 ஆம் தேதி மதுரையில் நடக்கவிருக்கும் பிறந்தநாள் விழாவில் தெரிவிப்பேன்.அதுவரை தொண்டர்கள் அமைதி காக்க வலியுறுத்தியுள்ளேன் என்றும் அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க முயன்றதால் திமுக வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க அழகிரி தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று அறிவித்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.