Home கலை உலகம் குடியரசு தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு ‘பத்மபூஷன்’ விருதுகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு ‘பத்மபூஷன்’ விருதுகள்

741
0
SHARE
Ad

Kamalhassan-300-x-200ஜனவரி 26 – (கூடுதல் தகவல்களுடன்) இன்று இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பத்மவிபூஷன், பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரபல நடிகர் கமல்ஹாசனுக்கும், கவிஞர் வைரமுத்துவுக்கும் பத்மபூஷன் என்ற உயரிய விருது இந்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தென்னிந்திய நடிகர்களில் இதுவரை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும், தமிழ்ப் படவுலகின் ரஜினிகாந்த்தும் பத்மபூஷன் கௌரவங்களைப் பெற்றுள்ளனர்.

பிரபல யோக நிபுணர் பிகேஎஸ் ஐயங்கார் பத்ம விபூஷன் பெறுகின்றார். இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பத்மபூஷன் விருது பெறும் மற்றொரு பிரமுகராவார்.

பிரபல இந்திப்பட நடிகை வித்யாபாலன், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல்ஆகியோர் பத்மஸ்ரீ விருதுகளைப் பெறுகின்றனர்.

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கடம் வித்வான்டி.எச்.விநாயக்ராம், இஸ்ரோதலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன், நீதிபதி தல்வீர் பண்டாரி, விஞ்ஞானிதிருமலாச்சாரி ராமசாமி, ஹிந்துஸ்தானி இசைப் பாடகி பர்வீன் சுல்தானா, ஆங்கிலோ இந்திய எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், தேசிய பாட்மிண்டன் பயிற்சியாளர்கோபிசந்த், எழுத்தாளர் அனிதா தேசாய் உள்பட மொத்தம் 24 பேருக்கு பத்ம பூஷண்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன் ஆகியோரும் பதமஸ்ரீ விருதைப் பெறுகின்றனர்.