Home இந்தியா “கருணாநிதி-அழகிரி மோதல் ஒரு குடும்ப நாடகம்” – பிரேமலதா விஜயகாந்த் சாடல்!

“கருணாநிதி-அழகிரி மோதல் ஒரு குடும்ப நாடகம்” – பிரேமலதா விஜயகாந்த் சாடல்!

701
0
SHARE
Ad

alagiri stalin

#TamilSchoolmychoice

சென்னை, ஜன 30 – திமுகவிற்கும் விஜயகாந்தின் தேமுதிக கட்சிக்கும் இடையில் நாடாளுமன்றத் தேர்தல் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அப்படி எதுவும் இல்லை என்பதுபோல், திமுக தலைவர் கருணாநிதிக்கும், அவரது மகன்அழகிரிக்கும் இடையே நடக்கும் மோதல் ஒரு குடும்ப நாடகம் என்று தேமுதிகதலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் சாடியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே தேமுதிக மாநில மாநாடு வரும் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறுகிறது.இந்த மாநாட்டுப்  பணிகளை பார்வையிடுவதற்காக பிரேமலதா புதன்கிழமை வருகை தந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.அழகிரி நீக்கப்பட்டது குறித்து பேசிய அவர் “ஒரு மூத்த அரசியல்வாதி, மிகப்பெரியத் தலைவர் என்று பெயரெடுத்தவர்பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கிறார். அவரது மகனும் பேட்டி கொடுக்கிறார். இதுஒரு குடும்ப நாடகம்” என்று கூறினார்.

பிரேமலதாவின் இத்தகைய கருத்து, திமுக, தேமுதிக கட்சிகளுக்கிடையில் உடன்பாடு ஏற்படும் வாய்ப்புகள் மேலும் மங்கி வருகின்றன என்பதையே காட்டுகின்றது.