Home வணிகம்/தொழில் நுட்பம் முத்தியாரா டாமன்சாராவில் மிகப்பெரிய சாம்சுங் விற்பனை காட்சியகம்!

முத்தியாரா டாமன்சாராவில் மிகப்பெரிய சாம்சுங் விற்பனை காட்சியகம்!

611
0
SHARE
Ad

Samsung logo 300 x 200ஜனவரி 30 – பல்வகை மின்னியல் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் தென் கொரியாவின் சாம்சுங் நிறுவனம் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள முத்தியாரா டாமன்சாரா பகுதியில் தனது முதலாவது மிகப் பெரிய விற்பனை காட்சியகத்தை கடந்த ஜனவரி 28ஆம் தேதி முதல் திறந்துள்ளது.

#TamilSchoolmychoice

பயனீட்டாளர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் சாதனங்கள் இங்கே காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருக்கும் என்பதோடு அவற்றின் பயன்பாடுகளை பயனீட்டாளர்கள் நேரடியாக பரிட்சை செய்து அனுபவித்து உணர முடியும்.

சாம்சுங் நிறுவனத்தின் அனைத்து தரப்பட்ட சாதனங்களை ஒரே கூரையின் கீழ் பயனீட்டாளர்கள் நேரடியாக அனுபவித்து உணரும் சூழ்நிலையை உருவாக்குகின்ற வகையில் இந்த காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

14,000 சதுர அடி பரப்பில் பல்வேறு பிரிவுகளாக இந்த காட்சியகம் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

உயர்தர சாதனங்கள், வீட்டு உபயோக சாதனங்கள், பொழுது போக்கு சாதனங்களின் காட்சியகம், சாதனங்களை வாங்கிய பின்னர் நன்முறையில் பாதுகாப்பது,பயன்படுத்துவது குறித்த பிரிவு, சாதனங்களைப் பரிட்சித்துப் பார்க்கும் வசதி, விவேக (Smart) சாதனங்கள், குழந்தைகளுக்கான சாதனங்கள் என பல்வேறு பிரிவுகளாக இந்த காட்சியகம் இயங்கும்.