சென்னை, பிப்.03 – தமிழ் நாட்டில் திராவிட இயக்க பாரம்பரியம் இன்றுவரை வேரூன்றி நிற்க அடித்தளம் அமைத்த பேரறிஞர் அண்ணாவின் 45–வது நினைவு நாள் இன்று தமிழ் நாடெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி அண்ணா தோற்றுவித்த கட்சியான தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணிநடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி திருவல்லிக்கேணிவாலாஜா சாலைக்கு காரில் வந்தார். அவர் தலைமையில் பேரணி புறப்பட்டது.
இப்பேரணியில் பொதுச்செயலாளர்அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, ஆகியோர் இப்பேரணியில் நடந்து சென்றனர். அவர்கள் பின்னால் தொண்டர்கள் அணி வகுத்துசென்றனர்.
பேரணி காமராஜர் சாலையை அடைந்ததும் அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.