கோலாலம்பூர், பிப் 5- கீரை வகைகளில் மணத்தக்காளி கீரையும் ஒன்று. இந்த கீரையில் இலை, காய், பழம் இருக்கும். இந்த மூன்றையும் சமைத்து சாப்பிடலாம். மணத்தக்காளி கீரையினால் நிறைய நன்மைகள் உண்டு. அவை பின்வருமாறு :
1. மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மூலம் ஆகிய நோய்கள் குணமாகும். சளி, இருமல், போன்ற கப நோய்கள் தடுக்கப்படும்.
2. கண் பார்வை நன்றாக தெரியும்.
3. விட்டமின் ஏ, பி மற்றும் இரும்பு, சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் மணத்தக்காளி கீரையில் அதிகம். இவை உடலுக்கு நன்மை தரும்.
4. மணத்தக்காளி கீரைக் குழம்பை குழந்தைகள், கர்ப்பிணிபெண்கள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.