Home உலகம் அமெரிக்க அதிபரின் வரலாற்று புகழ்மிக்க உரை!

அமெரிக்க அதிபரின் வரலாற்று புகழ்மிக்க உரை!

999
0
SHARE
Ad

obama-new-picஅமெரிக்கா, பிப்.13- அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது இரண்டாவது ஆட்சிப்பருவத்தை ஆரோக்கியமான பாதையில் நகர்த்தத் திட்டமிட்டுள்ளார்.

நேற்று இரவு அவர் அமெரிக்கக் காங்கிரசில் ஆற்றியுள்ள உரை அந்த எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இனி ஆயுதப்பரவலை கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்பது போன்ற புதிய சட்டங்களை நேற்றிரவு அவர் அறிமுகம் செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

நியூரவுணில் உள்ள பாடசாலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோரும் இந்த உரையை கேட்டபடி இருந்தனர்.

நேற்றிருந்த 15 சிறுவர்களும் இன்று நம் முன் இல்லை. அவர்கள் இந்த அவல நிலையை அடைய காரணம் துப்பாக்கியானது சரளமாக சந்தையில் விற்பனையாவதுதான், இந்த நிலையை அனுமதிக்க இயலாது என்று ஒபாமா கூறினார்.

மனநோய் உள்ளவர்களுக்கு துப்பாக்கி இல்லை, தோட்டாக்களின் அளவு பத்துக்கு மேல் இல்லை, துப்பாக்கிகளின் உயிர் குடிக்கும் வீரியம் குறைக்கப்படுதல் போன்ற 23 அம்ச பிரேரணை துணை அதிபர் ஜோ பிடனால் ஏற்கெனவே முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுபோல 65 பில்லியன் டாலர்களை ஒதுக்கி நாட்டின் அடிப்படைப் பொருளாதாரத்தை மீட்கும் அதிரடித் திட்டத்தையும் ஒபாமா அறிவித்தார்.

இதில் 50 பில்லியன் டாலர்கள்  அடிப்படை  கட்டமைப்பு மாற்றத்திற்கு பயன்படவுள்ளது, இதுவரை அமெரிக்காவில் இருந்த காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகளை மாற்றி, புதுமையையும் இளமையையும் புகுத்தி பொருளாதராத்தை மேம்படுத்த இந்தப் பணத்தை ஒபாமா ஒதுக்குகிறார்.

சம்பள விகிதாச்சாரத்தைக் குறைத்து 50 களில் இருந்த அளவுக்கு பின்தள்ளி, வரி சீர்திருத்தத்தை கொண்டு வந்து புதிய பொருளாதார கொள்கைகளை துணிந்து முன் வைத்துள்ளார்.

இதனால் அமெரிக்க நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை ஒளிமயமாகும் என்று கூறப்படுகிறது.

தேர்தலுக்கு முன்னர் தொடரப்பட்ட பல்வேறு விஷயங்களை இப்போது ஒபாமா துணிந்து தொட ஆரம்பித்துள்ளதாகவும் நான்கு ஆண்டுகள்  மீதம் இருந்தாலும் அவர் தனது இலக்கை வரும் இரண்டு ஆண்டுகளில் எட்டித் தொட்டுவிடுவார் என்றும் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

இதன் அடுத்த அங்கமாக மார்ச் மாதம் பாலஸ்தீனம், இஸ்ரேல் தலைவர்களை நேரடியாக சந்தித்து, இன்னும் முடியாமல் இருக்கும் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கப் போகின்றார் ஒபாமா.

வீழ்ந்து கிடக்கும் உலகப் பொருளாதாரத்தை ஒபாமா இரண்டு ஆண்டுகளில் நிமிர்த்திவிடுவார் என்ற நம்பிக்கைக் குரல்களும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றது.

பணத்தைக் கொட்டி அமெரிக்காவின் அடிப்படை நியமங்களை மாற்றினால் உலகமும் அதன் அடியொற்றி மாறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.