“இந்த விவகாரத்தில் அஸ்மின் அலி அவ்வாறு தவறாக நடந்திருக்கக் கூடாது. தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பில், அவர் தான் காரணம் என்று காலிட் கூறவும் இல்லை.” என்று அன்வார் கூறினார்.
மேலும்,“நான் அவர்களது பிரச்சனையை கண்டும் காணாதது போல் இருப்பதாக பலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையில்லை. கடுமையாக அறிவுரை கூறியிருக்கின்றேன். இதற்கு மேல் என்னால் விளக்கமளிக்க முடியாது” என்று அன்வார் குறிப்பிட்டார்.
கடந்த வாரம், பிகேஎன்எஸ் தொழிலாளர்கள் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைத்த பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலி, சிலாங்கூர் மந்திரி பெசாரான காலிட் இப்ராகிம் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறினார்.