புதுடில்லி, பிப் 10 – ”நான் அரசியலுக்கு வருவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை” என டில்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
“இந்த நாட்டில் ஊழல் அரசியல்வாதிகள், நிறுவனங்களின் தலைவர்கள், சில அதிகாரிகள், சில ஊடகங்களின் தலைவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஆனால் சாதாரண அப்பாவி மக்களிடம் அந்த மகிழ்ச்சியை பார்க்க முடியவில்லை. நாட்டில் நல்ல மாற்றம் ஏற்பட்டால், ஆட்சியை கலைத்துவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்குத் தயாராக இருக்கின்றேன்” என கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், “என்னை, புரட்சியாளர் என்கின்றனர். ஆம் நான் புரட்சியாளன் தான். அரசியல் புரட்சியை ஏற்படுத்த விரும்புகிறேன். ஏராளமானோர் என்னிடம் வருகின்றனர். புரட்சியாளனான என்னிடம் வேலை பார்க்க விரும்புகின்றனர்.தேவைப்பட்டால், நான் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன். இருந்தபோதிலும், என் முதல் மற்றும் முக்கிய கடமை டில்லி தான்.” என்றும் கெஜ்ரிவார் கூறியுள்ளார்.