Home இந்தியா சூரியனை ஆராய்ச்சி செய்ய ‘ஆதித்யா’ செயற்கைகோள்!

சூரியனை ஆராய்ச்சி செய்ய ‘ஆதித்யா’ செயற்கைகோள்!

638
0
SHARE
Ad

Tamil_Daily_News_52335321904சேலம், பிப் 10 – சூரியனின் இயக்கத்தை ஆராய்ச்சி செய்வதற்காக ‘ஆதித்யா’ என்ற செயற்கைகோளை வரும் 2017-18 ம் நிதியாண்டில் விண்ணில் ஏவவுள்ளது இந்தியா.

இது குறித்து இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய செயல்திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், “சந்திராயன் விண்கலத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. தற்போது சந்திராயன்2 திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டுள்ள மங்கல்யான் விண்கலம் சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. வரும் செப்டம்பர் 24ம் தேதி அவ்விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை சென்றடையும்” என்று தெரிவித்தார்.

“சந்திரன், செவ்வாய் ஆராய்ச்சியை அடுத்து சூரியனின் இயக்கத்தை ஆராய்ச்சி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆதித்யா செயற்கைகோள் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கை கோள், சூரியனை விட்டு சற்று தூரத்தில் பூமியின் ஈர்ப்பு விசைக்கும், சூரியனின் ஈர்ப்பு விசைக்கும் ஏதுவாக உள்ள இடத்தில் நிறுவப்படும். ஒரு பக்கம் பூமி, மறுபக்கம் சூரியன் என்ற அந்த இடத்தில் இருந்து சூரியனின் இயக்கத்தை முழுமையாக ஆய்வு செய்ய முடியும். இந்த ஆதித்யா செயற்கை கோள், வரும் 2017-18ம் நிதியாண்டில் விண்ணில் ஏவப்படும். அதற்கான பணியை மேற்கொண்டுள்ளோம்” என்று  மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.