Home நாடு முன்கூட்டியே பிரச்சாரமா? அன்வாரிடம் காவல்துறை விசாரணை!

முன்கூட்டியே பிரச்சாரமா? அன்வாரிடம் காவல்துறை விசாரணை!

911
0
SHARE
Ad

Anwar-Ibrahim_1568721cகாஜாங், பிப் 11 – காஜாங் இடைத்தேர்தல் பிரச்சாரங்களை நிர்ணயித்த தேதிக்கு முன்கூட்டியே செய்யத் தொடங்கிவிட்டார் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

காஜாங் தொகுதியில் கடந்த வாரம் முதல் அன்வார் பல கூட்டங்களை நடத்தியதாகவும், அது தொடர்பாக காவல்துறை அவரை அமைதிப் பேரணி சட்டம் 2012 ல் கீழ் விசாரணை செய்யவுள்ளதாகவும் பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

அன்வார் சட்டத்தை மீறியிருப்பதாக விசாரணையில் தெரியவந்தால் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice