Home இந்தியா விஜயகாந்த் ஒரு ஸ்டண்ட் நடிகர் – எளிதில் பிடி கொடுக்க மாட்டார் – கருணாநிதி

விஜயகாந்த் ஒரு ஸ்டண்ட் நடிகர் – எளிதில் பிடி கொடுக்க மாட்டார் – கருணாநிதி

613
0
SHARE
Ad

120326061730_Vijayakanth-1திருச்சி, பிப் 14 – விஜயகாந்த் ஒரு ஸ்டண்ட் நடிகர். சண்டை காட்சிகளில் எதிரிகளுக்கு பிடி கொடுக்காமல் இருப்பது போல் கூட்டணி விஷயத்திலும் பிடி கொடுக்காமல் இருந்து வருகின்றார் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.

நாளை திருச்சியில் திமுக மாநாடு நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, “விஜயகாந்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளேன். தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் எங்கள் அணியில் இணைவது போல், விஜயகாந்தும் தமது அணிக்கு வருவார் என்ற எனது நம்பிக்கை வீண் போகாது என கருதுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமராகும் ஆசை உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, “எனது உயரம் எனக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice