பிப்ரவரி 18 – சில ஆண்டுகளுக்கு முன்னால் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது ஒரு நபர் தனது காலணியை எடுத்து வீச, அந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதை பலர் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.
1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் செய்யாதவர்கள் என்று கடந்த 2009 ஆண்டுசிதம்பரம் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஜர்னயில் சிங் என்ற சீக்கியர் சிதம்பரம்மீது தனது காலணியை எடுத்து வீசினார்.
அவருக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட, அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலானஆம் ஆத்மி கட்சி வாய்ப்பு கொடுத்துள்ளது.
டில்லி சட்டமன்றத்தை இழந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வருகிற நாடாளுமன்ற தேர்தலில்போட்டியிட்டு கணிசமான இடங்களைப் பிடிப்பதற்கு வியூகத்தை வகுத்து கடுமையாகப் பாடுபட்டு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் 20 வேட்பாளர் பட்டியலை ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டது. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துகுமார் விஸ்வாஸ் போட்டியிடுகிறார். மேலும் மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரம் மீது காலணி வீசிய ஜர்னயில் சிங் என்பவருக்கு மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.