Home நாடு மந்திரி பெசார் ஆகிவிடுவேனோ என்று மகாதீருக்கு பயம் – அன்வார்

மந்திரி பெசார் ஆகிவிடுவேனோ என்று மகாதீருக்கு பயம் – அன்வார்

913
0
SHARE
Ad

Anwar-Ibrahim-300x202கோலாலம்பூர், பிப் 18 – சிலாங்கூர் மந்திரி பெசாராக நான் ஆகிவிடுவேனோ என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் பயப்படுகிறார் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

நேற்று இரவு காஜாங்கில் தாமான் இம்பியான் முர்னியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அன்வார், “எல்லாவற்றிற்கும் காரணம் அன்வார் தான். ஓப்ஸ் லாலாங்கும் என்னுடைய தவறு தான். அப்போது டாக்டர் மகாதீர் பிரதமராக இருந்தாலும் கூட என்னை தான் குற்றம் சாட்டுகின்றனர்” என்று தெரிவித்தார்.

கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கி அன்வார் துணைப்பிரதமராக இருந்து வந்தார். அதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு ஓரினப்புணர்ச்சி வழக்கு மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக அப்போதைய பிரதமரான மகாதீரால் நீக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

இதனிடையே தன்னை அமெரிக்க கைக்கூலி என்று மகாதீர் சொல்லுவதாகவும், தான் மந்திரி பெசார் ஆகிவிடுவேனோ என்று மகாதீருக்கு பயம் வந்துவிட்டது என்பது இதன் மூலம் உறுதியாகிவுள்ளது என்றும் அன்வார் கூறினார்.