Home இந்தியா மோடியை ஆதரிக்க தயார் : ஜெகன் மோகன் அறிவிப்பு

மோடியை ஆதரிக்க தயார் : ஜெகன் மோகன் அறிவிப்பு

674
0
SHARE
Ad

Tamil_News_large_918338புதுடில்லி,பிப்18- “தெலுங்கானா மாநிலம் உருவாவதை தடை செய்தால், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், மோடியையும் ஆதரிக்கத் தயார்,” என, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.

தெலுங்கானா மாநிலத்தைப் பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து, டில்லி, ஜந்தர்மந்தரில் நேற்று, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த கூட்டத்தில், ஜெகன் மோகன் பேசியதாவது: இந்தியாவை ஆண்ட, வெள்ளைக்காரர்கள் கூட, ஆந்திராவைப் பிரித்த, தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என, முயற்சிக்கவில்லை.

#TamilSchoolmychoice

ஆனால், இத்தாலியில் பிறந்து, காங்கிரஸ் தலைவராக ஆகியுள்ள சோனியா தலைமையிலான காங்கிரஸ், அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

சீமாந்திரா பகுதி, எம்.பி.,க்கள்,சட்டசபையில் பங்கேற்கக் கூடாது என்பதற்காக, திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் தான், நாடாளுமன்றதில் சில தினங்களுக்கு முன், அரங்கேற்றப்பட்ட, “பெப்பர் ஸ்பிரே’ சம்பவம்.

“தெலுங்கானா மாநிலம் உருவாக்க மாட்டோம்’ என, உறுதியளித்தால், வரவிருக்கும்,நாடாளுமன்றத்தேர்தலில், மோடியை ஆதரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.என ஜெகன் மோகன் பேசினார்.

முன்னதாக, சீமாந்திரா எனப்படும், தெலுங்கானா தவிர்த்து, பிற பகுதிகளைச் சேர்ந்த, மத்திய அமைச்சர்கள், கே.எஸ்.ராவ், பல்லம் ராஜு, புரந்தேஸ்வரி ஆகியோர், பா.ஜ., மூத்த தலைவர், அத்வானியை சந்தித்து, சீமாந்திரா பகுதிக்கு அதிக நிதி மற்றும் திட்டங்கள் கிடைக்க, பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் மூலம் வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

தெலுங்கானா மாநிலத்திற்கு ஆதரவாக இருக்கும், பா.ஜ., தெலுங்கானா மசோதாவை, விவாதமின்றி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிப்பதை எதிர்த்து வருகிறது.