இந்நிலையில் இன்று அவர்களையும் மேலும் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 4 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு தொல். திருமாவளவன் வரவேறு தெரிவித்துள்ளதோடு தமிழக அரசுக்கு நன்றியும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியின் போது
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தேமுதிகவும் இணையும் எனறு நம்புகிறோம். சேது சமுத்திர திட்டம், மதவாத கொள்கைக்கு எதிரிப்பு உள்ளிட்ட வற்றில் காங்கிரஸ் திமுக விடுதலை சிறுத்தை ஆகிய கட்சியில் ஒருமித்த கருத்து கொண்டிருக்கிறது.
இந்த கூட்டணியில் தேமுதிகவும் இணைந்து கொண்டால் மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.