Home வணிகம்/தொழில் நுட்பம் இணைய சேவை நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை 120 மில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு ஜோகூர் சுல்தான்...

இணைய சேவை நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை 120 மில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு ஜோகூர் சுல்தான் வாங்கினார்.

622
0
SHARE
Ad

Johor-Sultan-300-x-200கோலாலம்பூர், பிப்ரவரி 19 – ஜோகூர் பாரு நகரின் மையப் பகுதியிலுள்ள மதிப்பு வாய்ந்த தனது நிலங்களை பெரும் தொகைக்கு விற்றதன் மூலம் கிடைத்த ரொக்க வருமானத்தை ஜோகூர் சுல்தான் பல வழிகளிலும் முதலீடு செய்து வருகின்றார்.

#TamilSchoolmychoice

எம்ஓஎல் எக்செஸ் போர்ட்டல் சென்டிரியான் பெர்ஹாட் (MOL AccessPortal Sdn Bhd) எனப்படும் நிறுவனத்தின் 15 சதவீதப் பங்குகளை 120 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ரொக்கமாக விலை கொடுத்து ஜோகூர் சுல்தான் வாங்கியுள்ளார்.

இந்த நிறுவனம் இணைய சேவைகளையும், மின்னியல் சேவைகளையும் வழங்கும் நிறுவனமாகும். தென்கிழக்காசியாவிலேயே பெரிய இணைய சேவை நிறுவனங்களுள் இதுவும் ஒன்றாகும்.

இந்த பங்கு முதலீட்டுக்கு அந்த நிறுவனமும் ஒப்புதல் அளித்திருக்கின்றது.

இணையம் மூலமாக கட்டணம் செலுத்தும் சேவைகளை வழங்குவதில் ஆசியாவிலேயே பெரிய நிறுவனங்களுள் இந்த எம்ஓஎல் நிறுவனமும் ஒன்றாகும். இணைய வழியான விளையாட்டுக்களையும் இணையம் வழியான விற்பனை சேவைகளையும் இந்த நிறுவனம் வழங்கி வருகின்றது.

ஏற்கனவே, பல நிறுவனங்களில் ஜோகூர் சுல்தான் முதலீடு செய்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.