Home கலை உலகம் நயன் என் தோழி! ஹன்சிகா என் காதலி! மனம் திறக்கும் சிம்பு

நயன் என் தோழி! ஹன்சிகா என் காதலி! மனம் திறக்கும் சிம்பு

713
0
SHARE
Ad

Simbu-and-Nayanthara-are-Friends-Again-3சென்னை, பிப் 20 – தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாராவுடன் ‘இது நம்ம simbu-hansikaஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இதனால், மீண்டும் அவர்களது பழைய காதல் புதுப்பிக்கப் பட்டுவிட்டது என்றும், அவர்கள் நிச்சயதார்த்தம் வரைப் போய் விட்டதாகவும் ஹன்சிகா -சிம்பு காதல் முறிந்து விட்டது எனவும் பல்வேறு தகவல்கள் வெளியாயின.

இதற்கிடையே, சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு ஆனந்த அதிர்ச்சி தந்தார் ஹன்சிகா.

மேலும், அதே நாளன்று ஹன்சிகாவைப் புகழ்ந்து, நயன்தாராவைத் திட்டி தான் பாடிய வாலுப் பட பாடலை வெளியிட்டார் சிம்பு.

#TamilSchoolmychoice

இந்நிலையில் ஆனந்தவிகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘நயன் என் தோழி தான், ஆனால் ஹன்சிகா என் காதலி’ என தெளிவாக பதிலளித்துள்ளார் நடிகர் சிம்பு.நான் என்றுமே  என் காதல மறைதது கிடையாது. ஆதே மாதிரி அதுல பிரச்சினைனாலும் நானே அதை வெளியே சொல்லுவேன்.

ஹன்சிகா அம்மாவுக்கு எங்க காதல் பிடிக்கலைனா, நாங்க எப்படி அடிக்கடி சந்திச்சுக்க முடியும்?
ஹன்சிகாவுக்கும் எனக்கும் உள்ள காதலில் நயந்தாராவுக்கு எந்த சம்மந்தமும் இல்ல.

இப்போ சினிமாவில் ஹன்சிகா மத்த ஹீரோக்கள் கூட நடிக்கிறதை நான் தப்புனு சொல்ல முடியுமா?அப்படித்தான் நயந்தாரா என்கூட நடிக்கிறதையும் ஹன்சிகா பாக்குறாங்க.

ஆனால், அது எப்படி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கலாம்?னு முடிவு பண்ணிக்க முடியாதவங்க தான், கற்பனையான காரணங்கள் பரப்புறாங்க. எனக்கு நயன் தோழி, ஹன்சிகா காதலி.

சரியோ, தப்போ… வாழ்க்கையின் சில காலம் அவங்களும் இருந்திருக்காங்க. அதுக்கான மரியாதையைக் கொடுத்து தான் ஆகணும். இப்போ நம்ம பழைய டீச்சரைப் பாக்குறப்ப சட்டுனு ஒரு பரவசமாகி ஒரு சந்தோஷம் வரும்ல. டீச்சர் சொல்லிக் கொடுத்த சில விஷயங்களை நம்ம ஆயுளுக்கும் மறக்க முடியாது.

அப்படித்தான் முன்னாள் காதலன் காதலியும் நம்ம வாழ்க்கையில சில பரவசங்கள் கொடுத்திருப்பாங்க. சில பாடங்கள் கத்துக் கொடுத்திருப்பாங்க. நமக்காக நிறைய விஷயங்கள் பண்ணியிருப்பாங்க.

அதுக்கான மரியாதையை என்னைக்கும் அவங்களுக்கு கொடுக்கணும், அதை மட்டும் செய்தாலே போதும்.இன்னும் எளிமையா சொல்லணும்னா, அவங்களைப் பத்தின நல்ல விஷயங்களை மட்டும் நினைச்சுப் பார்ப்போமே என்று சிம்பு தெரிவித்தார்.