Home கலை உலகம் ஹாலிவுட் நிறுவனத்துடன் பிரபுதேவா மோதல்!

ஹாலிவுட் நிறுவனத்துடன் பிரபுதேவா மோதல்!

543
0
SHARE
Ad

600x450_1340718820_600x450சென்னை, பிப் 21 – பட தலைப்பு தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையில் ஹாலிவுட் நிறுவனத்துடன் மோதலுக்கு தயாராகிவிட்டார் பிரபுதேவா.

இந்தியில் முன்னணி இயக்குனராக உள்ளார் பிரபுதேவா. அவர் இயக்கி வரும் படம் ஆக்ஷன் ஜாக்சன். இதில் அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். இந்த படத்தின் தலைப்பில் ஹாலிவுட்டிலும் ஒரு படம் தயாராகிறது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இதை தயாரித்து வருகிறது. கிரேய்க் ஆர்.பேவ்லே இயக்கி வருகிறார்.

பாலிவுட்டில் இந்த தலைப்பில் படம் தயாரிப்பதை அறிந்து அந்த நிறுவனம் அதிர்ச்சி அடைந்தது. இது குறித்து இந்தியாவில் உள்ள வார்னர் பிரதர்ஸ் பட நிறுவனத்தார் பாபா பிலிம்சுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

#TamilSchoolmychoice

பாபா பிலிம்ஸ்தான் பிரபுதேவாவின் படத்தை தயாரிக்கிறது. இது தொடர்பாக இந்தி சினிமா தயாரிப்பாளர் சங்கத்திலும் வார்னர் பிரதர்ஸ் புகார் அளித்துள்ளனர்.

ஹாலிவுட் படத்துக்கும் தனது படத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் எந்த நிலையிலும் தலைப்பை மாற்ற முடியாது என்றும் பிரபுதேவா திட்டவட்டமாக கூறியுள்ளாராம். இது குறித்து பாபா பிலிம்ஸ் உரிமையாளர் தன்வானி கூறும்போது, நாளை மறுநாள் தயாரிப்பாளர் சங்கத்தில் அவசர கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இந்த பிரச்னை பற்றி பேச உள்ளனர்.

அது ஹாலிவுட் படம். இது இந்திய படம். ஒரே தலைப்பை வைப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது. நாங்கள் தலைப்பை விட்டுத் தரமாட்டோம். திடீரென வார்னர் பிரதர்ஸ் எங்கள் படத்தின் ஸ்கிரிப்ட்டை கேட்கிறார்கள். அது எப்படி தந்துவிட முடியும் என்றார். – See