லண்டன், பிப்.14 -சர்வதேச அளவில், கைத்தொலைப்பேசிகளின் விற்பனை 2009ம் ஆண்டிற்கு பிறகு சரிவடைந்துள்ளன.
தனிநபர் பொருளாதாரத்தில் தொய்வு, பயனாளர் விருப்பங்கள் தொடர்ந்து மாறுபடுவது உள்ளிட்ட காரணங்களால், விற்பனை கைத்தொலைப்பேசிகள் சரிவடைந்துள்ளதாக, கார்ட்னர் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில், கைத்தொலைப்பேசிகளின் விற்பனை 2012ம் ஆண்டில் 1.7 சதவீதம் சரிவடைந்துள்ள நிலையிலும், ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள முதன்மை இடங்களை பிடித்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளது.
2012ம் ஆண்டில், சாம்சங் நிறுவனம் 385 மில்லியன் ஸ்மார்ட்போன்களையும், ஆப்பிள் நிறுவனம் 130 மில்லியன் ஸ்மார்ட்போன்களையும் விற்பனை செய்துள்ளது.