Home நாடு 100 நாட்களில் அடையாள அட்டை?

100 நாட்களில் அடையாள அட்டை?

703
0
SHARE
Ad

Saravanan-Sliderகோலாலம்பூர், பிப்.14- மலேசிய நாட்டில் லட்சக்கணக்கான இந்தியர்கள் குடியுரிமையற்ற நிலையில் உள்ளனர்.

எனினும், அவர்களை புத்ரா ஜெயாவிற்கு வரவழைத்து காட்டுவோம் என்றெல்லாம் உறுதியளித்த எதிர்க்கட்சி தலைவர்கள் வாக்குறுதிகள் இறுதியாக வெற்று வாக்குறுதியாகிவிட்டது.

மக்கள் கூட்டணி புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் 100 நாட்களில் நீல நிற அடையாள அட்டை வழங்கப்படும் என்று சிலங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நாட்டில் லட்சக்கணக்கான இந்தியர்கள் நாடற்ற நிலையில் உள்ளனர் என்று கூறிய இவர்கள் 100 நாட்களில் நீல நிற அடையாள அட்டை வழங்கப்படும் என்று அறிவித்தால், அதற்கு இரண்டே வழிதான் இருக்கிறது. ஒன்று இவர்களின் நாடற்ற இந்தியர்களின் எண்ணிக்கை பொய் என இவர்களே ஒப்புக் கொண்டிருக்க வேண்டும்.இல்லையேல் பதவிக்கு வந்த பின் வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டாலும் பரவாயில்லை  என்ற எண்ணம் கொண்டிருக்க வேண்டும்.

இருப்பினும், இந்நாட்டில் சிவப்பு நிற அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் ஏதாவது ஒரு பிரச்சனைக் காரணமாக நீல நிற அடையாள அட்டை கிடைகாமல் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதனை சேவியர் உணர மறந்திருக்கிறார் என்று மஇகா தேசிய உதவித் தலைவருமான டத்தோ சரவணன் எடுத்துரைத்தார். மேலும், அவர்களுக்கு உதவுவதற்காகவே மை டஃப்தார் இயக்கம், டிரா மலேசியா போன்ற அமைப்புகள் உதவி கரம் நீட்டி வருகின்றன.

கேட்டவுடனே கிடைத்து விடாது இந்த நீல நிற அடையாள அட்டை. மாறாக, முறையாக விண்ணப்பங்களை ஆராயப்பட்டு விண்ணப்பத்தாரின் பெற்றோர் அல்லது உடன் பிறப்புகள் இல்லையெனில் அவரது நெருங்கிய உறவினர்களின்  சாட்சி அல்லது மரபணு சோதனையின் மூலம் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.பரிசீலனை செய்து முடித்த பின்னரே குடியுரிமைக்கான பதில் வழங்கப்படுகிறது.

இப்பிரச்சனையை முழுமையாக தீர்க்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் பல முறை உறுதிமொழி தந்துள்ளார் என்பதனையும் டத்தோ சரவணன் சுட்டிக் காட்டினார்.