Home இந்தியா தவறாக பிரசாரம் செய்யும் ஊடகங்களை நசுக்க வேண்டும்-ஷிண்டே!

தவறாக பிரசாரம் செய்யும் ஊடகங்களை நசுக்க வேண்டும்-ஷிண்டே!

694
0
SHARE
Ad

30-sushilkumar-shinde5-600புனே, பிப் 25 – காங்கிரசுக்கு எதிராக தவறாக பிரசாரம் செய்யும் மின்னணு ஊடங்களை நசுக்க வேண்டும் என பேசி மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே அச்சுறுத்தியுள்ளார்.

இது குறித்து தனது சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் நடந்த ஒரு இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிண்டே பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது சமீபத்தில் கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் காங்கிரசுக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை பரப்பிவரும் மின்னணு ஊடங்களை நசுக்க வேண்டும் என்றார். எனது துறை கட்டுப்பாட்டின் கீழ் புலனாய்துறை உள்ளது.

#TamilSchoolmychoice

இது போன்ற விஷயங்களை யார் செய்கிறார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும் என்றார். நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள், தனியார் ஏஜென்சிகள் மூலம் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.

இது பா.ஜ.,வுக்கு சாதகமான கணக்குகளை சொல்லிவருகின்றன.
நாட்டின் பிளவை மன்னிக்க முடியாது. நாட்டின் பிளவை யாரும் மன்னிக்க மாட்டார்கள்.

இந்திய மக்கள் அதை விரும்ப மாட்டார்கள். மீடியாக்கள் நேர்மறையான கருத்துகளை தெரிவிப்பதில் அக்கறை காட்ட வேண்டும். அதைதான் மக்களும் வரவேற்பார்கள். நாட்டை துண்டாட மற்றும் சமூகத்திற்கு துன்பம் விளைவிப்பது இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதேபோல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் செயல்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.