Home நாடு “அடுத்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடையும்” – வேதமூர்த்தி

“அடுத்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடையும்” – வேதமூர்த்தி

453
0
SHARE
Ad

WAYTHA18_540_363_100கோலாலம்பூர், பிப் 25 – 14 வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடையும் என்று ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நஜிப் துன் ரசாக் இந்தியர்களுக்கு துரோகம் செய்ததன் விளைவாக, இந்தியர்கள் மட்டுமல்ல, மலாய்காரர்கள் உட்பட மலேசியாவில் வாழும் மற்ற இனங்களின் வாக்குகளும் தேசிய முன்னணிக்கு கிடைக்காது என்றும் வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுவதாக பொதுவில் வாக்குறுதியளித்து விட்டு, அதை நிறைவேற்றாமல் போன தேசிய முன்னணியின் துரோகத்தை அனைவரும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது ஒரு மனித உரிமை மீறல்” என்றும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“ஏற்கனவே சீனர்களின் வாக்குகளை இழந்து விட்ட தேசிய முன்னணி, தற்போது இந்தியர்களின் வாக்குகளையும் இழந்துவிட்டது” என்று வேதமூர்த்தி கூறியுள்ளார்.

இனி தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் மாநிலங்களில் வாழும் மக்கள் ஒரு போதும் தேசிய முன்னணியை நம்பப் போவதில்லை. அதே நேரத்தில் இந்தியர்களின் வாக்குகளை தேசிய முன்னணி நிரந்தரமாக இழந்து விட்டது என்றும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.